7376 நல்வாழ்வு தரும் யோகக்கலை.

நாகலிங்கம் குலசிங்கம். சுவிட்சர்லாந்து: கிருஷ்ணா யோகா நிலையம், Rte Joseph-Chaley 15, 1700 Fribourg, 1வது பதிப்பு, ஜுன் 2009. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்).

197 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-51144-2-4.

யாழ்ப்பாணம், இணுவில் கிராமத்தைப் பிறப்பிடமாகக்கொண்ட நூலாசிரியர் ஒரு ஆயுர்வேத வைத்தியராவார்.  யோகக்கலைமூலம் நோய்நீக்கும் முறைகளை விரிவாக புகைப்பட விளக்கங்களுடன் இந்நூலில் விளக்கியுள்ளார். யோகம் என்றால் என்ன, நோய்கள் வரக் காரணங்கள், காலத்தைப் பொன் செய்யுங்கள், யோகக் கலை ஏன் கற்கவேண்டும், யோகக் கலையைக் கற்க விரும்பும் மாணவர் கவனத்திற்கு, யோகாசனம் பழகுவதால் ஏற்படும் நன்மைகள், பிராணசக்தி, சமைத்த உணவின் தீமைகளும் சமைக்காத உணவின் நன்மைகளும், சூரிய நமஸ்காரம், அஷ்டாங்க யோக முறை, யோகத்தின் ஏழு பெரும் பிரிவுகள், நீரிழிவு நோய் உள்ளவர் கவனத்திற்கு, நீரிழிவு நோய் உள்ளவர்கள் செய்யவேண்டிய ஆசனங்கள், மலச்சிக்கல் வரக் காரணம், மலச்சிக்கல் உள்ளவர்கள் செய்யவேண்டிய ஆசனங்கள், மூலவியாதி உள்ளவர்கள் செய்யவேண்டிய ஆசனங்கள், வயிற்றில் வாய்வுவலி உள்ளவர்கள் செய்யவேண்டிய ஆசனங்கள், குஷ்டரோகம் உள்ளவர்கள் செய்யவேண்டிய ஆசனங்கள், நரம்புத்தளர்ச்சி உள்ளவர்கள் செய்யவேண்டிய ஆசனங்கள், ஆஸ்த்மா நோய் உள்ளவர்கள் செய்யவேண்டிய ஆசனங்கள், குடலிறக்கம் உள்ளவர்கள் செய்யவேண்டிய ஆசனங்கள், இரத்த அழுத்தம் உள்ளவர்கள் செய்யவேண்டிய ஆசனங்கள், முப்பத்திநான்கு முக்கிய ஆசனங்கள், மாணவர்கள் படங்கள், பவனமுத்தாசனங்கள், யாவரும் நலமுடன் வாழவேண்டும் ஆகிய 26 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.  பின்னிணைப்பாக சுவாமி சிவானந்தா எழுதி நர்மதா பதிப்பகத்தினால் வெளியிடப்பட்ட மன அமைதிப் பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கைப் பாதை என்ற நூலும் முழுமையாக மீள்பிரசுரமாகியுள்ளது.

ஏனைய பதிவுகள்

Lazy Titanic Tycoon

Posts Mini Small Blocks Titanic Design Strengthening Put Which are the Latest Action Game Exactly like Inspector Magnusson: Murder To your Titanic?/h2> Inside a september

11021 பத்தாண்டு நிறைவுவிழா மலர்: 1990-2000.

தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம். கொழும்பு 7: தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம், இல. 14, சுதந்திர வழி, 1வது பதிப்பு, 2000. (மகரகம: தரஞ்ஜி பிரின்டர்ஸ், நாவின்ன). 72 பக்கம்,

21red Casino Und Sportwetten

Content Tsars Casino Fazit: Durch Casino Freispiele Zu Den Risikolosen Gewinnen Eingabe Eines Bonus Code Während Oder Nach Der Registrierung Wheelz Casino In einigen Fällen