M.S.M.அனஸ். கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, 1/2 டாம் வீதி, 1வது பதிப்பு, 2007. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, 1/2, டாம் வீதி).
xii, 112+16 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 400., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-659-072-2.
இலங்கையில் முஸ்லிம்களின் நுண்கலை மரபும் கலை பற்றிய சிந்தனைகளும் இந்நூலில் பிரதான விடயப்பொருள்களாகும். தமிழ்நாடு, பாக்கிஸ்தான், மற்றும் முஸ்லிம் நாடுகளின் நுண்கலைகளின் பொதுப்போக்குகளின் குறித்த சில அம்சங்கள் பற்றியும் இந்நூல் ஆராய்கின்றது. முஸ்லிம்களின் கலை ஈடுபாடு, இரசனையியல் உணர்வு, என்பன மனிதப் பொது இரசனையின் அம்சமாக ஏன் கொள்ளப்பட்டிருக்கவில்லை என்பதும் கலை தொடர்பான முஸ்லிம்களின் எதிர்ப்புணர்வுகளின் யதார்த்தம் என்ன என்ற வினாவும் இந்நூலில் பேசப்படும் மற்றும் சில விடயங்களாகும். கலைக்கெதிரான மனோபாவங்கள் எவ்வாறு இருந்தபோதும் கலைத்துறையில் முஸ்லிம்களின் சில சாதனைகள் மகத்துவம் மிக்கவை. முஸ்லிம்களிடையே நிலவும் கலைகளுக்கும் ஆதரவற்ற மனோபாவம் எதை அடிப்படையாகக் கொண்டது என்ற வினா தொடர்ச்சியான கருத்துப் பரிமாற்றத்துக்குரியது. இது இந்நூல் முழுவதும் விரவிநிற்கும் ஒரு பொது விமர்சன நோக்கு என்று குறிப்பிடலாம். பேராதனைப் பல்கலைக்கழக மெய்யியல்துறைத் தலைவராகப் பணியாற்றும் கலாநிதி முஹம்மது ஸாலிஹ் முஹம்மது அனஸ் (M.S.M.அனஸ்) பேராதனை மீவத்துறையைச் சேர்ந்தவர். (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 616752).