7393 புதிய சித்திரக்கலை.

ஏ.எஸ்.சற்குணராஜா. பருத்தித்துறை:  எஸ்.பப்ளிக்கேஷன்ஸ், வியாபாரிமூலை,  2வது பதிப்பு, செப்டெம்பர் 2001, 1வது பதிப்பு, 1996. (கொழும்பு 6: எஸ்.பிரின்ட், 4C, 1, பஸல்ஸ் லேன்).

vi, 132 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 29×21 சமீ.

ஆண்டு 9, 10, G.C.E.(O/L) மாணவர்களுக்கான நூல். சித்திரப் பாடத்திற்கென முழுமையாகப் பாடப்பரப்பு, விளக்கப் படங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய நூல் இது. சித்திரக் கலையின் தோற்றம், இரேகைகள், வர்ணங்கள், சித்திரக் கலைக்கான ஊடகங்கள், சமநிலை, தூரதரிசனம், அளவீடு கண்மட்ட ரேகைகள், பரவுரூபம், கொலாஜ், கிராபிக் முறைகள், பற்றிக் அலங்காரம், ஈரச்சுதை, உலர்ச்சுதை, சிந்துவெளிக் கலைகள், இராசபுத்தான ஓவியங்கள், இந்தியக் கட்டிடக்கலை  என்பன உள்ளிட்ட 40  பிரிவுகளில் சித்திரக் கலையின் பல்வேறு அம்சங்களும் இந்நூலில் விரிவாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. இறுதி இயலில் வினாப்பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன. பருத்தித்துறை வியாபாரிமூலையைப் பிறப்பிடமாகக் கொண்ட நூலாசிரியர் மேலைப் புலோலி சைவப்பிரகாச வித்தியாலயத்தினதும், ஹாட்லிக் கல்லூரியினதும் பழைய மாணவராவார். சித்திரபாடச் சிறப்புப் பயிற்சிபெற்ற இவர் யாழ். ஹாட்லிக் கல்லூரியில் 10 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி, பின்னர் கொழும்பு புவக்பிட்டிய சீ.சீ.தமிழ் மகாவித்தியாலயத்தில் பணியாற்றுகிறார்.

ஏனைய பதிவுகள்

21red Casino Und Sportwetten

Content Tsars Casino Fazit: Durch Casino Freispiele Zu Den Risikolosen Gewinnen Eingabe Eines Bonus Code Während Oder Nach Der Registrierung Wheelz Casino In einigen Fällen