ச.அருளானந்தம். வவுனியா: முத்தமிழ்க் கலாமன்றம், 1வது பதிப்பு, மே 1990. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம், 430, காங்கேசன்துறை வீதி).
(6), 20 பக்கம், விலை: ரூபா 30., அளவு: 25×19 சமீ.
ஆரம்பப் பாடசாலைகளில் ஆசிரியர் இயற்றிக் கற்பித்த சிறுவர் பாடல்கள் இவை. அன்பு, ஆமை, இறைவன், ஈ, உறவு, ஊர், எறும்பு, ஏணி, ஐயர், ஒட்டகம், ஓணான், ஒளவை, சேவல், பாம்பு, வண்ணத்துப்பூச்சி, தோகைமயில், காந்தித் தாத்தா, கச்சான் காற்று, எங்கள் பாட்டி, குளம் ஆகிய இருபது தலைப்புகளில் ஒவ்வொன்றிலும் நான்கு நாலடிப் பாடல்வீதம் வழங்கியுள்ளார்.