கே.எஸ்.அருணந்தி (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 3வது பதிப்பு, 2011, 1வது பதிப்பு, 1935, 2வது பதிப்பு, 1941. (கொழும்பு 6: குமரன் அச்சகம், 39, 36ஆவது ஒழுங்கை).
xvi, 131 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-1997-19-9.
இந்நூலில் மா.பீதாம்பரம், கி.அகிலேசசர்மா, ச.பஞ்சாட்சர ஐயர், க.சோமசுந்தரப் புலவர், சி.தங்கசாமி ஐயர், என்.எஸ்.முருகேசு, ஜே.எஸ்.ஆழ்வாப்பிள்ளை, அ.கிறில், கே.கே.செபஸ்தியாம்பிள்ளை, கே.சின்னத்தம்பி, ஜே.கே.சீனிவாசன், என்.தம்பிப்பிள்ளை, க.அழகரத்தினம் ஆகியோரின் 74 பாடல்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. முன்னாள் வடமாகாண கல்வி இயக்குநரான கே.எஸ்.அருணந்தி அவர்கள் தொகுத்து 1935இல் வெளியிட்டிருந்த இந்நூலே ஈழத்தின் முதலாவது குழந்தை இலக்கிய நூலாகக் குறிப்பிடப்படுகின்றது. இருப்பினும் முன்னதாக 1918இல் பிரதான தமிழ் முதலியாரான ச.வைத்தியநாதரால் தமிழ்ப் பாலபோதினி என்ற தலைப்பிலான குழந்தைகளுக்கேற்ற அபிநயப்பாடல் தொகுதியொன்றும் வெளியிடப்பட்டுள்ளது. வித்தியாதரிசி க.ச.அருள்நந்தியின் முன்முயற்சியால், நடத்தப்பெற்ற சிறுவர் பாடல் புனைதற் போட்டியில் தெரிவுசெய்யப்பட்ட பாடல்களின் தொகுப்பு.