செல்லையா குமாரசாமி. யாழ்ப்பாணம்: நிலா பதிப்பகம், வெளியீட்டுப் பிரிவு, இராஜ வீதி, கோப்பாய், 1வது பதிப்பு, ஆவணி 2009. (யாழ்ப்பாணம்; நிலா பதிப்பகம், இராஜ வீதி, கோப்பாய்).
v, 67 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 150., அளவு: 20.5×14.5 சமீ.
இந்நூல் முப்பது சிறுவர் பாடல்களைக் கொண்டுள்ளது. பாலர், குழந்தை என்ற வயது நிலைகளைக் கடந்து சிறுவர் என்ற பருவநிலையினை மனம் கொண்டே பெரும்பாலும் இப்பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. சிறுவர்களுக்கு ஏற்புடையதான, அவர்களுக்கு அறிமுகமானதும் பரிச்சயமானதுமான சொற்களை, சொற்றொடர்களை, உவமைகளை ஆசிரியர் இப்பாடல்களில் பொருத்தமான வகையில் கையாண்டுள்ளார். நாவற்குழி (கைதடி)யைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு செல்லையா குமாரசாமி கவிஞராக, நாடக எழுத்தாளராக, நாவலாசிரியராகப் பல்துறை விற்பன்னராக விளங்குபவர். 50களில் அல்லி என்னும் மாதச் சஞ்சிகையை நடாத்தியவர்.