7439 கலியாணச் சாப்பாடு.

குமாரதுங்க முனிதாச (சிங்கள மூலம்), சரோஜினிதேவி அருணாசலம் (தமிழாக்கம்). கொழும்பு 11: எம்.டி.குணசேன அன் கொம்பனி, 217, ஒல்கொட் மாவத்தை, 1வது பதிப்பு, 1972. (கொழும்பு 11: அச்சகப் பிரிவு, எம்.டி.குணசேன அன் கொம்பனி).

xx, 76 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 4.00, அளவு: 18.5×12.5 சமீ.

குமாரதுங்க முனிதாச சிங்கள இலக்கியத்தின் முக்கியமான படைப்பாளிகளுள் ஒருவர்.  இவர் எழுதிய ஹத்பன, மகுல்காம, ஹீன்சரய ஆகிய மூன்று சிறுவர் நூல்களும் மிகப் பிரபல்யமானவை. அவற்றில் மகுல்காம என்ற நூல்  இங்கு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. மனிதகுலத்தின் மடைமையை எள்ளிநகையாடும் இவ்வங்கதக் கதை கோழியூர், நரிக்காடு, நட்பும் பகையும், அசையாத நம்பிக்கை, தயாராதல், போர், கலியாணப் பேச்சு, சம்மதம், நரிக்காட்டில் நிச்சயதாம்பூலம், கோழியூரில் நிச்சயதாம்பூலம், உற்சவம், திருமண உபதேசம், கலியாண ஊர்வலம், பெயரின் முதலெழுத்து ஆகிய 14 அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு நகைச்சுவையாக இருக்கும் இக்கதை- வளர்ந்தோருக்கு சிந்தனையைத் தூண்டுவதாக அமைகின்றது.  இந்நாவலைத் தமிழாக்கம் செய்த சரோஜினிதேவி இலங்கை அரசகரும மொழித் திணைக்களத்தைச் சேர்ந்தவர். தந்தையாராக நவாலியூர் சோ.நடராசனையும் பாட்டனாராக நவாலியூர் சோமசுந்தரப் புலவரையும் கொண்ட இலக்கியப் பரம்பரையின் வழிவந்தவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 119673).

ஏனைய பதிவுகள்