அநு.வை.நாகராஜன். யாழ்ப்பாணம்: வைரமான் வெளியீடு, சங்கராபரணம், தென் மயிலை, தெல்லிப்பழை, 1வது பதிப்பு, ஜுலை 2005. (கொழும்பு 12: நிசான் பிரின்டர்ஸ், 64 N, மீர்சாஹிபு வீதி).
xii, 148 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 17.5×12.5 சமீ., ISBN: 955-98393-5-6.
இந்நூலில் நீண்ட காலமாக சிறுவர் நலவியலில் தான் கண்ட அனுபவங்களையும் கருத்துக்களையும் ஆய்வுநோக்கில் ஆசிரியர் தர முனைந்துள்ளார். சிறுவர்- தோற்றுவாயும் விளக்கமும் முதலாவது பிரிவிலும், அறிவுசார் சாதனங்கள் இரண்டாவது பிரிவிலும் விளக்கப்பட்டுள்ளன. அறிவுசார் சாதனங்களில் கட்புல சாதனங்களான நூல்களும் பிறவும் தனியாகவும், கட்புல-செவிப்புல சாதனங்களான திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்பன தனியாகவும் பிரித்து விளக்கப்பட்டுள்ளன. இந்நூல் 15ஆவது வைரமான் வெளியீடாகவும் ஆசிரியரின் ஒன்பதாவது சிறுவர் நூலாகவும் அமைகின்றது.