7455 சீமந்தனி புராண மூலமும் உரைநடையும். 

ச.பூபாலபிள்ளை (மூல ஆசிரியர்), ஈழத்துப் பூராடனார் (உரையாசிரியர்), அன்புமணி இரா. நாகலிங்கம் (பதிப்பாசிரியர்).  கனடா: நிழல் வெளியீடு, ஜீவா பதிப்பகம், 1108, Bay Street, Toronto, Ontario M5S 2W9,  2வது பதிப்பு, ஒக்டோபர் 1989, 1வது பதிப்பு, 1894. (கனடா: ரிப்ளக்ஸ் அச்சகம், டொரன்டோ).

xxxx, 226 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13.5 சமீ.

சீமந்தனி என்பவள் சித்தரவர்மன் என்பவனின் மகள். சோதிடர்கள் சீமந்தனியின் நாட்குறிப்பைப் பார்த்து 14 வயதில் அவள் அமங்கலியாவாள் என்று கூறுகின்றனர். இதனை அறிந்து கவலை கொண்ட சீமந்தனி, ஞாஞ்ஞவல்கிய முனிவரின் மனைவியாகிய மைத்திரியிடம் சென்று நிலைமையைக் கூற, அவள் சீமந்தனியை சோமவார விரதத்தை அனுட்டிக்குமாறு அறிவுரை கூறுகின்றாள். அதன்படி சீமந்தனி சோமவார விரதம் இருக்கிறாள்.  இந்நிலையில் நிடததேச மன்னனாகிய சந்திராங்கதனை மணம்புரிகிறாள். சந்திராங்கதன் ஒருநாள் ஜமுனை நதியில் தோணியேறிச் செல்ல தோணி கவிழ்கிறது . சந்திராங்கதன் தவிர்ந்த அனைவரும் நதியில் மூழ்கி இறக்கின்றனர். சந்திராங்கதன்  தப்பிப்பிழைத்து நாகராசனால் காப்பாற்றப்பட்டு,  நாகலோகம்சென்று சிறிது காலம் வாழ்கிறான்.  அதேவேளை அவன் இறந்துவிட்டான் என நம்பி சீமந்தனி விதவைக் கோலம் கொள்கின்றாள். பின்னர்; சந்திராங்கதன் குணமானதும் மீண்டும் ஜமுனைக்கரைக்கு வர அங்கே சீமந்தனி சோமவார விரதம் அனுட்டித்து நீராட வருகிறாள். தான்  இறந்துவிட்டதாக எண்ணி  அவள் விதவைக்கோலத்தில்  இருப்பதைக்கண்டு வருந்துகிறான். ஈற்றில் அவளை இரண்டாவது முறை மணந்து இனிது வாழ்கிறான். (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 425446).

ஏனைய பதிவுகள்