அருணா சுந்தரராசன். சிவகங்கை 623 560: அகரம், 2, சிவன்கோவில் தெற்குத் தெரு, இணை வெளியீட்டாளர்கள்: இலக்கியா வெளியீடு, மானாமதுரை, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1985. (சிவகங்கை 623 560: அகரம்).
84 பக்கம், விலை: இந்திய ரூபா 6.00, அளவு: 17.5×12 சமீ.
நான் சமுதாய மாற்றம் விரும்பிநிற்கும் ஒரு நாத்திகக் கவிஞன். மூடநம்பிக்கை விஷம் சமுதாயத்தில் எந்த வடிவில் பரவியிருந்தாலும், அதை அழித்து நிர்மூலமாக்குவதில் என் கவிதை துணை நிற்கும் என்ற பிரகடனத்துடன் படைப்புத்துறைக்குள் 1975களில் பிரவேசித்தவர் இவர். இலங்கையிலும் தமிழகத்திலும் உள்ள ஊடகங்களில் இவரது படைப்புக்கள் பிரசுரமாகியுள்ளன. ஈழத்தில் பிறந்து பின்னாளில் தமிழகத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்தபோதிலும், தான் வேரோடிய ஈழத்தமிழ்மண்ணை மறவாது கவிதைபாடிவரும் குறிப்பிடத்தக்க கவிஞர்களுள் அருணா சுந்தரராசனும் ஒருவர். இக்கவிதைத் தொகுப்பில் இவரது புதுக்கவிதைகள் இடம்பெற்றுள்ளன.