அனார் (இஸ்ஸத் ரீஹானா முஹம்மட் அஸீம்). நாகர்கோயில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, செப்டெம்பர்; 2007. (சென்னை 60005: மணி ஓப்செட்).
56 பக்கம், விலை: இந்திய ரூபா 40., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-89945-10-7.
ஈழத்தமிழின் நவீன கவிதைக்குப் புதிய முகங்களைத் தருபவராக இருக்கிறார் அனார். அவருடைய கவிதைகளைத் திருப்பித் திருப்பிப் படிக்கின்றபோது, வேட்கையும் காதலும் மேலெழுகின்றன. தனிமையும் காத்திருப்பும் எரித்தாலும் ஊடல் சுடர்விடுகின்றது. பதற்றமும் பீதியும் சூழ்கின்றன. திசைகள் குழம்பித் தத்தளிக்கின்றன. உள்ளடங்கி இருந்தாலும் அனாருடைய கவிதைகள் தீட்டும் அரசியல் சித்திரம் மிகவும் முக்கியமானது. அனாரின் 31 கவிதைகளின் தொகுப்பு இதுவாகும். மனித வாழ்வின் நெளிவு சுழிவுகளை மண்புழுவின் மொழியில் கிளறிக் கிளறி வாழ்வின் ருசியைத் தேடி அலைய வைக்கின்றன இக்கவிதைகள். இது அனாரின் கவிதை நடையின் வெற்றியாகும். கிழக்கிலங்கையின் சாய்ந்தமருதுவைப் பிறப்பிடமாகக் கொண்ட அனாரின் முன்னைய நூலான ஓவியம் வரையாத தூரிகை என்ற கவிதைத் தொகுதிக்கு 2005இல் இலங்கை அரசின் சாகித்திய விருதும், வட-கிழக்கு மாகாண அமைச்சின் சாகித்திய விருதும் கிடைத்தன.