சி.வேலாயுதம். ஜேர்மனி: தமிழர் கலை கலாச்சார மன்றம், பேர்லின், 1வது பதிப்பு, ஜனவரி 2000. (சென்னை 600026: ஆண்டவன் ஓப்செட், 29/1 ஆண்டவன் கோவில் வீதி, வடபழநி).
85 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமராட்சிப் பகுதியில் உள்ள கரவெட்டிப் பிரதேசத்தின் பெருமையையும் சிறப்பையும் கூறும் நூல். கரவை மக்களின் சிறப்பு, கரவையில் அமைந்துள்ள கோயில்களின், பாடசாலைகளின் பெருமைகள் என்பன இந்நூலில் கவித்துவமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. கரவை மக்களின் வழமைகள், பழமைகள், பாரம்பரியம், பண்பாடு, தெய்வ வழிபாடு, பொழுதுபோக்கு எனப்பலவும் இக்கவிதைகளில் பொதிந்து காணப்படுகின்றன. ஜேர்மனியில் புலம்பெயர்ந்து வாழும் நூலாசிரியர், ஹம்பர்க் நகரில் வசிக்கின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23238).