14302 இலங்கை கம்யூனிஸ்ட் வாலிபர் சம்மேளனம்: 12ஆவது தேசிய மகாநாடு (நகல் அறிக்கை).

இலங்கை கம்யூனிஸ்ட் வாலிபர் சம்மேளனம். கொழும்பு: இலங்கை கம்யூனிஸ்ட் வாலிபர் சம்மேளனம், 1வது பதிப்பு, ஜுலை 2007. (அச்சக விபரம் தரப்படவில்லை). 24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ. இலங்கை கம்யூனிஸ்ட் வாலிபர் சம்மேளனம் தனது தேசிய மாநாட்டை 2007 ஜுலை 08 அன்று உயன்வத்தை விளையாட்டரங்கில் நடத்தியவேளையில் விநியோகிக்கப்பட்ட நகல் அறிக்கை இதுவாகும். இலங்கை கம்யூனிஸ்ட் வாலிபர் சம்மேளனம் பற்றிய அறிமுகம், உற்பத்தியும் தனி உடைமையும், சர்வதேச நிலைமைகள், புதிய தாராளமயம் சோசலிச அரச கட்டுமானங்கள் சரிந்து வீழ்ந்ததைப் பற்றி, புதிய லிபரல்வாதத்தினூடாக பாதகமான பாதுகாப்பற்ற உலகை நோக்கிய பயணம், புதிய லிபரல்வாதம் சவால்களுக்கு முகம்கொடுத்தல் என்பவை உள்ளிட்ட பல விடயங்கள் இவ்வறிக்கையின் பேசுபொருளாகியுள்ளன.

ஏனைய பதிவுகள்