மலர்க்குழு. ஜேர்மனி: புங்குடுதீவு தொண்டர் திருநாவுக்கரசு சர்வோதய நற்பணி ஒன்றியம், என்னப்பெற்றால், 1வது பதிப்பு, 2017. (ஜேர்மனி: ராஜி பதிப்பகம், Neu Str.53, 58256, Ennepetal).
68 பக்கம், வண்ணப்படங்கள், விலை: அன்பளிப்பு, அளவு: 30×21 சமீ.
புங்குடுதீவு தொண்டர் திருநாவுக்கரசு சர்வோதய நற்பணி ஒன்றியம் ஜேர்மனியில் என்னெப்பெற்றால் பிரதேசத்தில் 30.09.2017 அன்று நடத்திய கிராமிய பூபாளம் கலைமாலைப்பொழுது நிகழ்வில் வெளியிடப்பெற்ற சிறப்பு மலர். மேற்படி நற்பணி ஒன்றியத்தின் பல்வேறு தாயகப் பணிகள் பற்றிய புகைப்படங்களுடன் கூடிய நிகழ்வு அறிக்கைகளுடன், ஆசியுரைகள், கட்டுரைகள் என்பனவும், கடந்த ஆண்டு நடைபெற்ற கிராமிய பூபாளம் 2016 நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பும் இடம்பெற்றுள்ளன. புங்குடுதீவுப் பிரதேசம் பற்றிய தமது மனப்பதிவுகளைத் தாங்கிய பல புலம்பெயர்ந்தோரின் உரைகளையும்; இம்மலரில் காணமுடிகின்றது. சிறப்புக் கட்டுரையாக நூலகவியலாளர் என்.செல்வராஜா எழுதிய ’பிரதேச வரலாற்று மூலங்களில் புங்குடுதீவு: ஒரு நூல்வழித் தேடல்’ என்ற கட்டுரை (பக்கம் 21-34) இடம்பெற்றுள்ளது.