16062 உமாபதி தேவர் அருளிச்செய்த திருவருட்பயன்.

சு.சிவபாதசுந்தரம் (விளக்கவுரை). பருத்தித்துறை: சு.சிவபாதசுந்தரம், புலோலி, 1வது பதிப்பு, ஆனி 1918. (பருத்தித்துறை: கலாநிதி யந்திரசாலை).

120 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 16.5×12.5 சமீ.

இந்நூல் யாழ்ப்பாணம், சுழிபுரம், விக்டோரியா கலாசாலை ஆசிரியர் புலோலி நகர் சு.சிவபாதசுந்தரம் அவர்களின் விளக்கவுரையுடன்; பதிப்பிக்கப்பட்டது. இந்நூல் எளிதில் நினைவுறத்தக்க குறட்பாக்களால் ஆனமையாலும், உரையாசிரியரின் ‘சைவபோதம்” – இரண்டாம் புத்தகத்தில் விளக்கப்படாத சிறப்பியல்புகள் இந்நூலில் விரித்துரைக்கப் பட்டிருப்பதாலும், சைவசித்தாந்தத்தைத் தமிழில் கற்கத் தொடங்குவோருக்கும் இரண்டாம் புத்தகம் படித்தோருக்கும் பயன்படத் தக்கதென்னுங் கருத்தினால், விரிவான உரையோடு வெளியிடப்பட்டுள்ளது. இதிலுள்ள பதவுரை நிரம்பவழகிய தேசிகரது பொழிப்புரையைத் தழுவியும், விசேஷவுரை சிவஞானபோதம், சிவஞானசித்தியார் முதலிய சித்தாந்த சாத்திரங்களையும் அவற்றின் பேருரைகளையும் துணையாகக் கொண்டும் எழுதப்பட்டுள்ளன. இந்நூலின் பத்து அதிகாரங்களும் முறையே பதிமுதுநிலை, உயிரவைநிலை, இருண்மலநிலை, அருளதுநிலை, அருளுருநிலை, அறியுநெறிநிலை, உயிர்விளக்கம், இன்புறுநிலை, ஐந்தெழுத்தருணிலை, அணைந்தோர்தன்மை என்றவாறு பிரிக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 0937).

ஏனைய பதிவுகள்

7 Best Real Money Online Slots Sites Of 2024

Content Experiência Pressuroso 5 Gringos Casino Best New Casinos Buzzing Wilds, Elevado Slotrank Opções Infantilidade Comissão Em Sites Infantilidade Cassino Chineses Ciência escolher uma aparência