மலர்க் குழு. யாழ்ப்பாணம்: திருமறைக் கலாமன்றம், 238 பிரதான வீதி, 1வது பதிப்பு, 2005. (அச்சக விபரம் தரப்படவில்லை).
65 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×21.5 சமீ.
நீ.மரியசேவியர் அடிகளை இயக்குநராகக் கொண்ட திருமறைக் கலாமன்றத்தின் (தி.ம.க மன்றத்தின்) நாற்பதாண்டுப் பணியை பதிவாக்கும் ஆவணம். நாற்பதாண்டு கால நகர்வின் சுவடுகளில் நின்று, மதத்தில் இருந்து மானிடம் நோக்கிய யாத்திரை, விழிகளை அகலவைத்த அசோகா, யுத்தத்திற்கு சவால்விடும் சமாதானச் செயற்பாடுகள், தி.ம.க மன்றம் ஒரு பார்வை, யாழ் நகரில் மனமே, எமது மேடையில் ஸ்பாட்டக்கஸ், தி.ம.க மன்றத்தின் கலைஞர்கள் கௌரவிப்பு, பல்லினக் கலைஞர்கள் சங்கமித்த சமாதானக் கலைச் சங்கமம், தி.ம.க மன்றத்தின் சமாதான முன்னெடுப்புகளில் எழுத்தாளர்களும் கலைஞர்களும், தி.ம.க மன்றத்தின்; கலைத்தூது இனப்புரிந்துணர்வுக்கு அடித்தளமிட்ட கலைப்பால நிகழ்வுகள், தி.ம.க மன்றத்தின் புதுயுகம் நோக்கிய கலைப் பயணம், யாழில் மூவினங்களும் கலந்த விழா, தி.ம.க மன்ற வடலிக் கூத்தர் கலைக்குழுவின் ஓர் ஐரோப்பியக் கலைப்பயணம், உலகத் தமிழ்க் கலைஞர்களை ஒன்றிணைக்கும் தி.ம.க மன்றத்தின் கலைப்பணி, கலைப்பாலம்- இனங்களின் இடைப்பாலம், மும்மொழிக் கலைஞர்களின் பங்கேற்புடன் தி.ம.க மன்றத்தின் பூம் பூம், தி.ம.க மன்றச் சிறுவரின் தென்னிலங்கைச் சுற்றுலா, தி.ம.க மன்ற மகளிர் அணி, தி.ம.க மன்ற அரங்கில் நாடகம், நாட்டுக்கூத்து, இசை நாடகம், மட்டுநகரில் எழுத்தாளர் கலைஞர் மாநாடு, தமிழ்க் கலைகளுக்கு உயிரூட்டும் திருமறைக் கலாமன்றம், 40 வருட பூர்த்தியைக் கொண்டாடும் திருமறைக் கலாமன்றம், சிறுவர் உலகம் தி.ம.க மன்றத்தின் சிறுவர் பாசறை, கடல் வரைந்த ஓவியம் ஆகிய தலைப்புகளில் இம்மன்றத்தின் வரலாறு இம்மலரில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. பி.எஸ்.அல்பிரட், கொ.ராஜன், எப்.சொலமன்ரைன், எ.லத்தீஸ் லாஸ், அ.குயின் ஜான்சி, அ.ஜெனோவா, எவ்.லிசானி ஆகியோரை மலர்க்குழுவாகக் கொண்டு இம்மலர் வெளியிடப்பட்டுள்ளது.