7047 உளவியல் மூலக் கோட்பாடு (முதற் பகுதி).

பத்மசிறி த சில்வா (சிங்கள மூலம்), ஐ.தம்பிமுத்து (தமிழாக்கம்). கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 2வது பதிப்பு, 1976, 1வது பதிப்பு, 1976. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்).

(8), 32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

தேசிய உயர் கல்விச் சான்றிதழ் பரீட்சைக்குரிய நூல் இது. உளவியல் கல்வி தொடர்பான கோட்பாட்டு விளக்கங்களை இந்நூல் கொண்டுள்ளது. மேலைத்தேய கோட்பாடுகளை எமது நாட்டுக்கேற்ற வகையில் விளக்கியிருப்பது சிறப்பம்சமாகும். இந்நூலில் உளவியல் எனப்படுவது யாது? தற்கால உளவியலில் விஞ்ஞான முறைகள் பயன்படும் விதம், தற்கால உளவியலின் ஆரம்பமும் அதனைச் சார்ந்த மரபுகளும் ஆகிய மூன்று தலைப்புகளின்கீழ் உளவியற் பரப்புப்பற்றிய விளக்கம் தரப்பட்டுள்ளது. மூல நூலாசிரியர் இலங்கைப் பல்கலைக்கழக பேராதனை வளாக விரிவுரையாளராவார்.

ஏனைய பதிவுகள்