டேவிற் வி. பற்றிக்ஸ். யாழ்ப்பாணம்: அமலமரித் தியாகிகள் வெளியீடு, Oblate Publication Jaffna Province, 1வது பதிப்பு, ஆவணி 1999. (கொழும்பு 11: இ.ரவிவர்மன், 108/2 ஸ்ரீ கதிரேசன் வீதி).
112 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 22×14.5 சமீ.
நான்- உளவியல் சஞ்சிகையின் ஆசிரியர் வின்சன்ற் பற்றிக்ஸ் அடிகளாரின் உளவியல் கட்டுரைகளை உள்ளடக்கிய நூல். ஒரு மனிதனின் வாழ்வு உயர்வடைய அவனுடைய மன உணர்வுகள், செயற்பாடுகள் என்பன காரணமாகின்றன. இவற்றை உணர்ந்து, சுவைத்து, அனுபவித்து அதை மற்றவர்களும் சுவைக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் மனித வாழ்வின் உண்மைத் தத்துவங்களை தெட்டத்தெளிவாக எடுத்துக்கூறுவதாய் இந்நூல் அமைகின்றது. நல்மன மெல்லியல்பு, வாழுவதற்கான வேட்கை, ஆளுமை வளர்ச்சி, நானாக நான் ஆதல், உந்தலும் உணர்வுகளும், உறவுப் பரிமாற்ற ஆய்வு, சிந்தனை வடிவமும் சமுதாயச் சமநிலையும், தன்வயமாக்கலும் தன்னுருவாக்கலும், இல்லற இடர்பாடுகளும் இன்பமும், பெற்றோர் பிள்ளைகள் உறவு, அன்புநெறி வாழ்வுக்கான ஆதாரம், மறுமலர்ச்சிப் பயணம் ஆகிய 12 தலைப்புகளில் அமைந்த கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18108).