7115 குமாரபுர வெண்பாவும் திருவூஞ்சற் பதிகமும்.

இ.திருநாவுக்கரசு. முல்லைத்தீவு: குமாரபுர ஆலய திருப்பணி, 1வது பதிப்பு, ஜுலை 1970. (யாழ்ப்பாணம்: நாமகள் அச்சகம்).

24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

அடங்காப்பற்று மன்னர்களின் ஆட்சியில் தோன்றிய புராதன ஆலயங்களுள் குமாரபுரம், வற்றாப்பழை, புதுவூர், உருத்திரபுரம் என்பன பழமைமிக்கவை. தனியூற்றின் கீழ்ப்பாலமைந்த குமாரபுரப் பகுதி அக்காலத்துத் தண்ணீர் முறிப்பு என வழங்கப்படினும் முற்காலத்துப் பெரிய குருந்தனூர்க்குளம் என்ற பெயரால் வழங்கப்பெற்றதென அறியமுடிகின்றது.  அந்நியரால் அழிக்கப்பட்ட குமாரபுர ஆலயத்தின் பழைய தெய்வ உருவங்கள் இற்றைக்கு 2000 ஆண்டுகள் பழமையானவை என்று கருதப்படுகின்றது. முல்லைத்தீவைச் சார்ந்த குமாரபுர ஆலயத்தில் எழுந்தருளியிருந்து அடியார்க்கு அருள்பாலிக்கும் ஸ்ரீ சித்திரவேற் பெருமான் பேரில் இணுவையூர்ப் பண்டிதர் வித்துவான் இ.திருநாவுக்கரசு அவர்கள் பாடிய குமாரபுர வெண்பாவும், திருவூஞ்சற் பதிகமும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இந்நூல் மேற்படி கோவில் திருப்பணியின்பொருட்டு வெளியிடப்பட்டது.  (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 275661).

ஏனைய பதிவுகள்

10 Melhores Slots Na Betclic Em 2024

Content Os Critérios Puerilidade Listagem Dos Melhores Casinos Online Jogos Valendo Algum Online Elevado Provedor Das Slots Como Mais Pagam Acercade Portugal Melhores Casinos Online