ஐயாத்துரை வரதராஜா (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: திருமதி மகாலட்சுமி ஐயாத்துரை நினைவு வெளியீடு, 59, கலைமகள் வீதி, அரியாலை, 1வது பதிப்பு, மே 2009. (யாழ்ப்பாணம்: கணபதி பிரிண்டர்ஸ், திருநெல்வேலி).
xx, 44 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×13.5 சமீ.
இந்நூலில் அரியாலையூர் கவிஞர் வே.ஐயாத்துரை, சி.சிவதாசன், கலாபூஷணம் வே.க.பாலசிங்கம், செல்வமணி இரத்தினம், மகாலட்சுமி ஐயாத்துரை ஆகியோர் இயற்றிய சரஸ்வதி பாமாலைகளும், மா.வேதநாதன், ஐ.வரதராஜா, ஆகியோர் எழுதிய சரஸ்வதி பற்றிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. கவிஞர் வே.ஐயாத்துரை அவர்களின் துணைவியார் சிவபதப்பேற்றின் நினைவாக வெளியிடப்பட்ட மலர் இது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து நாகரீகத்துறைத் தலைவர் கலாநிதி மா.வேதநாதனின் ‘காலம் தோறும் சரஸ்வதி வழிபாடு’ என்ற கட்டுரையும் இந்நூலுக்கு அணிசேர்க்கின்றது.