7118 சைவ சமயம் ஓர் அறிமுகம்: சிறுவர் சமய இலக்கியம்.

செல்லத்தம்பி சிறீக்கந்தராசா. நோர்வே: இந்துக் கலாசார ஒன்றியம், Hindu Cultural Forum, P.O.Box 138, Loddefjord, 5881, Bergen, 1வது பதிப்பு, புரட்டாதி 2010. (கொழும்பு 6: பாஸ்ட் பிரின்டர்ஸ்).

66 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×15 சமீ.

நோர்வே இந்துக் கலாச்சார ஒன்றியம் பெர்கன் நகரில் 2008ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இவ்வமைப்பின் பணிகளில் ஓர் அங்கமாக புகலிட நாடுகளில் வாழும் தமிழ்ச் சிறார்களுக்குச் சைவத் தமிழ்க் கலாச்சாரத்தையும் சைவ சமயத்தின் அடிப்படை நம்பிக்கைகளையும் இலகுவாக அறியவைக்கும் நோக்கில் இச்சிறுநூல் உருவாக்கப்பட்டுள்ளது. நூலாசிரியர் லண்டனில் புலம்பெயர்ந்து வாழும் சட்டத்தரணியாவார். 40 ஆண்டுகளுக்கும் மேலாகச் சட்டத்தொழில் புரிந்து வாழும் இவர், தென்புலோலியூர்த் தமிழ் வித்தகர் கந்த முருகேசனார், கொழும்பு சிவன் கருணாலய பாண்டியனார், திருச்சி புனித ஜோசப் கல்லூரித் தமிழ்ப் பேராசான் ஐயன்பெருமாள் கோனார் ஆகிய தமிழ்ப் பேராசான்களிடம் முறைப்படி தமிழ்கற்றவர். ஈழத்தமிழறிஞர் வித்துவான் வேலனாரின் மருமகனார். ஏற்கெனவே சட்டமும் தமிழும், பங்காண்மைச் சட்டம், அவ்வையார் காட்டிய வழி, ஊர்க்காற்று, சட்டமும் சிரிக்கும் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

ஏனைய பதிவுகள்

200+ 3 Mangeln Spielautomaten erreichbar in Brd

Content Entsprechend Eltern über Kryptowährungen spielen – Wirklich so machen Die leser Den Inanspruchnahme im Slot Sweet Bonanza 1000 RTP, Volatilität and Maximalgewinn Inanspruchnahme auswählen: