வேலுப்பிள்ளை குணரத்தினம்.செங்கல்லடி 30350: கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை, 1வது பதிப்பு, 2007. (மட்டக்களப்பு: மைக்கேல் மொபைல் பிரின்டர்ஸ், 90 பார் வீதி).
xi, 148 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-1443-12-2.
முரண்பாடு பற்றி விளங்கிக்கொள்ளல், முரண்பாடு பற்றிய எண்ணக்கரு, மத்தியஸ்தம், பேச்சுவார்த்தை, சமாதானம் ஆகிய ஐந்து இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இவற்றின்கீழ் முரண்பாட்டுக்கான காரணங்களும் அவற்றிற்கான தீர்வுகளும், தடுப்புகளும், மத்தியஸ்தத்தின் பயன்பாடு, பேச்சுவார்த்தைக்கான அணுகுமுறைகளும் நுட்பங்களும், சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான இணக்கப்பாடு என்பனவற்றை ஆராய்ந்து விளக்கியுள்ளார். நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறையில் தனது இளங்கலைமாணி சிறப்புப் பட்டத்தினையும், முதுதத்துவமாணிப் பட்டத்தையும் பெற்றவர். கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தில் சமூக விஞ்ஞானத்துறையின் தலைவராகப் பணியாற்றுகின்றார்.