த.சண்முகசுந்தரம். தெல்லிப்பளை: அருள் வெளியீட்டகம், மாவைக் கந்தசுவாமி கோவிலடி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1981. (காங்கேசன்துறை: சந்திரா அச்சகம்).
(2), 22 பக்கம், விலை: ரூபா 3., அளவு: 18.5×12.5 சமீ.
மறுமலர்ச்சிப் பாதையில் மக்கள் கலைகள் என்ற தொடரில் வெளிவந்த நான்காவது நூல் இதுவாகும். தல மகிமையைக் கூறும் நூல்கள் மான்மியம் என்றழைக்கப்படும். இது பிரதேச வரலாற்றை மாத்திரமின்றி அப்பிரதேசத்துக் கோவிலில் எழுந்தருளியிருக்கும் கடவுளரையும் பாடக் குறிப்பிடப்பட்டது. பின்னாளில் அப்பிரதேசத்துக் குடிமகனைப் புகழ்ந்து பாடவும் மான்மியம் பயன்பட்டது. பொன்னம்பல மான்மியம், அருணாசல மான்மியம் என இப்பரப்பு விரிந்தது. அவ்வகையில் ஈழத்து நாட்டார் இலக்கியமான வன்னி நாய்ச்சியார் மான்மியம் வன்னிப் பிரதேசத்தின் பெருமையையும் வன்னிமைகளின் மனைவியரின் பெருமைகளையும் அப்பிரதேசத்தில் வழக்கிலுள்ள நாய்ச்சிமார் வழிபாடு பற்றியும் பேசுகின்றது. (The Glory of Vanni Chieftains’ wives).