ஜமால் ஜுமா (அறபு மூலம்), நினா பஸ்ஸத் (ஆங்கில மூலம்), அஷ்ரஃப் சிஹாப்தீன் (தமிழாக்கம்). வத்தளை: யாத்ரா வெளியீடு, 37, ஸ்ரீ சித்தார்த்த மாவத்தை, தன்கந்த ரோட், மாபோல, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2007. (அச்சக விபரம் தரப்படவில்லை).
xii, 50 பக்கம், படங்கள், விலை: ரூபா 120., அளவு: 18.5×12.5 சமீ., ISBN: 978-955-8448-02-1.
டென்மார்க்கில் வசிக்கும் ஈராக்கியக் கவிஞர் ஜமால் ஹ{மாவின் புத்தகங்களின் புத்தகம் என்ற நெடுங் கவிதையின் ஆங்கிலவழித் தமிழாக்கம் இதுவாகும். 2004 பொதுத் தேர்தல் காலத்தில் தினகரன் வார இதழில் இரண்டு வாரங்கள் தொடராக வெளிவந்து இடநெருக்கடி காரணமாக தொடர்ந்து வெளிவரவில்லை. பின்னாளில் யாத்ரா மே-ஆகஸ்ட் இதழ்களில் 2004 இதழ்களில் முழுமையாக வெளிவந்தது. விரிந்த வாசகர் பரப்பினைக் கருதி நூலுருவில் வெளிவந்துள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 219423).