மனோன்மணி சண்முகதாஸ். யாழ்ப்பாணம்: கோகுலம் வெளியீடு, 1வது பதிப்பு, ஒக்டோபர், 2011. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டர்ஸ், இல. 424 காங்கேசன்துறை வீதி).
xii, 154 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 19×25 சமீ., ISBN: 978-955-98925-3-3.
நாயன்மார்களின் பக்தி இலக்கியங்களில்- குறிப்பாக பாடல்களில் வரையப்பெற்ற பக்தி வாழ்வியல் பற்றிய தகவல்களை இலக்கியச்செறிவுடன் எளிய வடிவில் பலரும் அறியும்வண்ணம் சிறு குறிப்பகளாக வலம்புரி பத்திரிகையில் வெள்ளிக்கிழமைகள் தோறும் ஆசிரியர் எழுதிவந்த பக்தியின் மொழி தமிழ் என்ற நற்சிந்தனைக் குறுங்கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. அத்தகைய 154 இதழ்களில் வெளியாகிய வெள்ளி நற்சிந்தனைகளின் தொகுப்பு இதுவாகும்.