அநு.வை.நாகராஜன். யாழ்ப்பாணம்: வைரமான் வெளியீடு, சங்கராபரணம், தென் மயிலை, தெல்லிப்பழை, 1வது பதிப்பு, மே 2000. (கொழும்பு 12: நிசான் பிரின்டர்ஸ், 64 என் பீர்சாய்பு வீதி)
xxxvii, 314 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 22×14.5 சமீ.
ஆசிரியர், அதிபர், கல்வி நிர்வாகி எனப் பல்பரிமாணங்களில் சேவையாற்றியதுடன் இலக்கிய உலகில் ஓர் எழுத்தாளராகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர் அனு.வை.நாகராஜன். அறிவியல், பக்தி இலக்கியம், சிறுவர் இலக்கியம், நாட்டார் வழக்கு, திறனாய்வு என்பனவாகப் பல்வேறுபட்ட திசைகளிலும் இவரது எழுத்துப் பயணங்கள் அமைந்துள்ளன. இந்நூலில் அபிராமிப் பட்டரின் அபிராமி அந்தாதி பற்றி இவர் எழுதியுள்ளார். 18ம் நூற்றாண்டின் கடைக்கூற்றில் வாழ்ந்த அபிராமிப்பட்டர் , சுப்பிரமணிய ஐயர் என்ற இந்துமதத் துறவியாவார். அம்பிகையை வழிபடும் சாக்த நெறியில் ஈடுபாடுகொண்ட இவர் சோழநாட்டின் பகுதியான திருக்கடையூரில் வாழ்ந்தவர். இசையிலும் பாடல் புனைவதிலும் வல்லவரான இவர் ஓரிரவில் பாடி முடித்த அந்தாதி வகைப்பாடலே அபிராமி அந்தாதி என வழங்கப்படுகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 129908).