இராமகிருஷ்ண மிஷன். கொழும்பு 6: இராமகிருஷ்ண மிஷன், இலங்கைக் கிளை, 40, ராமகிருஷ்ணா வீதி, வெள்ளவத்தை, 13வது பதிப்பு, 2005, 1வது பதிப்பு, 1960. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(2), 296 பக்கம், தகடு, விலை: ரூபா 75., அளவு: 17.5×12.5 சமீ.
மனதை ஒருநிலைப்படுத்தித் தூய்மையாக்கும் பஜனை சாதனைகளில் அநேகமாகக் கையாளப்படும் நாமாவளிகளை இத்தொகுப்பு அதிகளவு உள்ளடக்கியது. ஸ்ரீ ராமகிருஷ்ண ஆராத்ரிகத்துடன் தொடங்கும் இந்த பஜனாவளி குரு, கணேசர், ராமகிருஷ்ணர், சாரதாதேவியார், சுவாமி விவேகானந்தர், சிவபெருமான், விஷ்ணு, சக்தி, ராமர், கண்ணன், முருகன், புத்தர், இயேசுநாதர், ஆகியோருக்கான தனித்தனி பஜனாவளிகளைத் தந்து இறுதியில் மங்களம், வேதபாடம் ஆகியவற்றுடன் நிறைவுபெறுகின்றது. ஈற்றில் பாடல்களின் முதற் குறிப்பகராதியும் தரப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 202735).