8170 பஜனாவளி.

பிரஸாந்தி நிலையம். யாழ்ப்பாணம்: பிரசாந்தி நிலையம், 646, காங்கேசன்துறை வீதி, நாச்சிமார் கோவிலடி, 1வது பதிப்பு, பங்குனி 1993. (யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம், 330, காங்கேசன்துறை வீதி).

(4), 212 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×15 சமீ.

குடும்பமாக அனுஷ்டிக்கப்படும் ஆத்மீக சாதனைகளிலும் கூட்டு ஆத்மீக சாதனை நிகழ்ச்சிகளிலும் பயிற்சிகளுக்குத் தேவைப்படும் விஷயங்களைப் பல நூல்களிலிருந்து பொறுக்கிப் பாவிக்கும் சிரமத்தை நீக்கி அவற்றை ஒரே நூலிலேயே ஓரளவுக்குத் தந்துதவும் கைநூலாக இது அமைகின்றது. பஜனை சாதனைகளில் அநேகமாகக் கையாளப்படும் நாமாவளிகளை  இத்தொகுப்பு அதிகளவு உள்ளடக்கியது.  இரு பகுதிகளில் அமைந்த இந்நூலின் முதற்பகுதியில் பல்வேறு ஸ்தோத்திரங்களும், மந்திரங்களும், ஸ்துதிகளும் பாடல் கருத்துக்களும் 17 தலைப்புகளின்கீழ் தரப்பட்டுள்ளன. இரண்டாம் பகுதியில் நாமாவளி வழிகாட்டியும் விநாயகர், குரு, சிவன், சக்தி, முருகன், இராமர், கிருஷ்ணர், நாராயணர், பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா, ஆகியோர் பேரிலான நாமாவழிகளும், ஸர்வமதப் பாடல்கள், தனிப்பாடல்கள், என்பனவும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  94733).

ஏனைய பதிவுகள்

11817 அப்பால் ஒரு நிலம்.

குணா கவியழகன். சென்னை 51: தமிழினி, 63, நாச்சியம்மை நகர், சேலவாயல், 1வது பதிப்பு, ஜனவரி 2016. (சென்னை 14: ஆர். கே. பிரிண்ட்ஸ்). 270 பக்கம், விலை: இந்திய ரூபா 240., அளவு: