பொ.வைத்திலிங்க உபாத்தியாயர் (மூலம்), ச.சுப்பிரமணிய சாஸ்திரி (உரை). செங்கலடி: சிவதொண்டன் நிலையம், மீள் பதிப்பு, தை 2000, 1வது பதிப்பு, 1905, 2வது பதிப்பு, கார்த்திகை 1973. (சென்னை 600002: காந்தளகம், 4, முதல் மாடி, ரகிசா கட்டிடம், 834 அண்ணா சாலை).
88 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
விநாயகப் பெருமானின் அநந்த குணங்களை அறிதலும் கேட்டலும் சிந்தித்தலும் ஆன்ம ஈடேற்றத்திற்கு உரியன. விநாயகர் விரதங்கள், விரதங்களை அனுட்டித்தவர்கள் பெற்ற பேறு, விநாயகப் பெருமானின் திருவருட் செயல்கள், முதலான அருள்பெருக்கும் விடயங்கள் நிறைந்த நூல் பிள்ளையார் புராணம் என்பதாகும். யாழ்ப்பாணம் புலோலி கிழக்கு பொ.வைத்தியலிங்க உபாத்தியாயரால் குரோத ஆண்டு (1904-1905) இயற்றப்பெற்ற இப்புராணம், பிரமாதீச ஆண்டு கார்த்திகை 1973இல் தும்பைநகர் ச.சுப்பிரமணிய சாஸ்திரிகளால் பார்வையிடப்பட்ட உரையுடன் பண்டிதமணி மு.கணபதிப்பிள்ளை அவர்களால் யாழ்ப்பாணம் ஸ்ரீகாந்தா அச்சகத்தில் அச்சிடப்பெற்று விநியோகிக்கப்பெற்றது. பிரதிகள் தீர்ந்த நிலையில் பின்னர் வெளியாகியுள்ள மட்டக்களப்பு மாவட்டத்து செங்கலடி சிவதொண்டன் நிலையத்தாரின் இப்பதிப்பு 1973இல் வெளியாகிய முன்னைய பதிப்பின் மீள்பதிப்பாகும்.