சத்தியசாயி பாபா (ஆங்கில மூலம்), ஞா.குகஞானி (மொழிபெயர்ப்பாளர்). யாழ்ப்பாணம்: இணைப்புக்குழு, அகில இலங்கை பகவான் ஸ்ரீ சத்திய சாயி சேவா நிறுவனங்கள், 1வது பதிப்பு, 1991. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், காங்கேசன்துறை வீதி).
vii, 76 பக்கம், விலை: ரூபா 30., அளவு: 21×14 சமீ.
1958இல் பகவான் ஸ்ரீ சத்தியசாயி பாபாவின் ஆசியுடன் தொடங்கப்பட்ட சனாதனசாரதி என்ற மாத இதழில் பாபா எழுதிய தொடர் கட்டுரைகளில் பிரேமவாஹினி குறிப்பிடத்தகுந்தது. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்ட இத் தொடர் கட்டுரையின் தமிழ் வடிவம் இதுவாகும். சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை என்னும் சாயியுக புது உலகின் நான்கு தூண்களுடன், பாபாவின் வழிகாட்டலின்கீழ் பிரேமை மூலம் சாந்தியைக் கண்டுகொள்ள வேண்டும் என்ற அடிப்படைக் கருத்தை இத்தொகுப்பிலுள்ள 33 கட்டுரைகளும் வலியுறுத்துகின்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 84825).