8178 மனிதனுள் உள்ளுறையும் தெய்வீகம் அறிமுகம்.

மு.க.சிவபாதவிருதையர். வவுனியா: பகவான் ஸ்ரீசத்ய சாயி சேவா நிலையம், சாந்தம், பிரசாந்தி வீதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (வவுனியா: மதி கிராப்பிக்ஸ்).

iv, 98 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 20.5×14.5 சமீ.

பகவான் ஸ்ரீசத்ய சாயி பாபாவின் அருளுரைகளை ஆதாரமாகக் கொண்ட  கருத்துக்களை இந்நூல் தொகுத்துத் தருகின்றது. ஒவ்வொரு கருத்தின் கீழும் அக்கருத்து என்றையதினம் அருளப்பட்டது அல்லது எந்த இதழில் பிரசுரிக்கப்பட்டது என்ற குறிப்பும் காணப்படுகின்றது. இத்தகைய  அருளுரைத் தொகுப்பு முயற்சிகள் பற்றிய கருத்துக்கள், பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா, சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் பார்வையில் எவ்வண்ணம் இருந்தன என்பதையும், சுவாமி ஆத்மகனாந்தாஜி மகராஜ் அவர்களின் ஆசியுரையையும் நூலின் தொடக்கத்தில் தருகின்றார். சாயி சமித்தியின் முன்னாள் மத்திய இணைப்பாளர் செ.சிவஞானம், வவுனியா-பகவான் ஸ்ரீசத்யசாயி சேவா நிலைய தலைவர் சி.இரகுநாதபிள்ளை ஆகியோரின் முகவுரையும் நூலை அலங்கரிக்கின்றன.  நூலாசிரியர் வவுனியா மக்கள் வங்கி பிராந்திய காரியாலயத்தில் பணியாற்றியவர்.

ஏனைய பதிவுகள்