ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், கந்தசாமி கோவிலடி, இணுவில், சுன்னாகம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2010. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செட் பிரின்ரேர்ஸ், பலாலி வீதி).
84 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20.5×14.5 சமீ.
இந்து சமயக் கிரியைகளின்போது பயன்படும் முக்கியமான சில மந்திரங்களின் தமிழ் விளக்கங்கள் இந்நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. சர்வானந்தமய பீடத்தின் பத்தாவது ஆண்டுச் சிறப்பு வெளியீடாக வெளிவந்துள்ள நூல். இது கிரியைகளில் பொதுவாகப் பயன்படும் மந்திரங்கள், நித்திய நைமித்தியக் கிரியைகளில் பயன்படும் மந்திரங்கள், மகோற்சவம் மற்றும் கும்பாபிஷேகம் என்பவற்றில் சிறப்பாகப் பயன்படும் மந்திரங்கள், அபரக் கிரியைகளில் பயன்படும் மந்திரங்கள், மற்றும் ஆத்மார்த்தமான சாதனைக்குரிய விஷேட மந்திரங்கள் என ஒரு மந்திர மாலையாக விளங்குகின்றது.