க.இராசரத்தினம். கிளிநொச்சி: மகாதேவா ஆச்சிரமம், ஜெயந்தி நகர், இணை வெளியீடு, கிளிநொச்சி: யோகர் சுவாமிகள் முதியோர் இல்லம், வன்னேரிக்குளம், 1வது பதிப்பு, நொவெம்பர் 2004. (யாழ்ப்பாணம்: ஸ்மார்ட் பிரின்டர்ஸ், காங்கேசன்துறை வீதி).
xxxii, 140பக்கம், புகைப்படத் தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.
அகில இலங்கை சமாதான நீதவானாகவும், சத்திய மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றிய க.இராசரத்தினம் கிளிநொச்சி கனகபுரத்தைச் சேர்ந்தவர். முதல் 32 பக்கங்களில் பல்வேறு ஆன்மீக, கல்வியியல், நிர்வாகத்துறைப் பிரமுகர்களின் ஆசியுரைகள் வாழ்த்துரைகள் அணிந்துரைகளுடன் தொடங்கும் இந்நூலில், எஞ்சிய 140 பக்கங்களிலும் யோக சுவாமிகளும் கிளிநொச்சியும், யோகசுவாமிகள் பாடியருளிய நற்சிந்தனைப் பாடல்களும் திருமுகங்களும், காயத்திரி மந்திரமும் பதவிளக்கமும், சிவத்தொண்டரும் திருத்தொண்டரும் (சிவத்தொண்டன் மலர் 22(01) இன் மீள்பதிப்பு, நாடும் ஈழத்து நற்றமிழ் நாட்டு ஞானப் பொக்கிஷங்களில் சிலர், மௌனம் (கனடா ஆர்.கிருஷ்ணபிள்ளையின் கட்டுரை), கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைகள் (கனடா ஆர்.கிருஷ்ணபிள்ளையின் ஆங்கிலக் கட்டுரை), இந்திய ஜனாதிபதி மாண்புமிகு ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு, ஆழ்மனத் தியானத்திலிருந்த வேளை கண்டுபிடிப்பினைச் செய்தேன்-பாங்கொக் சத்தியசாயி பல்கலைக்கழகத்தின் தலைவரும் நாஸா விஞ்ஞானியுமான கலாநிதி ஆர்ற் ஓங் ஜும் சாய், ஆத்ம விசாரத் துணுக்கு ஆகிய ஆக்கங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 213615).