8184 வழிபாட்டுக் கோலங்கள்.

மனோன்மணி சண்முகதாஸ். யாழ்ப்பாணம்: வலிகாமம் கிழக்கு சைவசமய அருள்நெறி மன்றம், 1வது பதிப்பு, 2012. (யாழ்ப்பாணம்: குரு பிரிண்டர்ஸ், ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).

vii, 117 பக்கம், விலை: ரூபா 260., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-906-00-0.

வழிபாடு மனித மனங்களைப் பண்படுத்தும். மனிதரின் வாழ்வில் ஏற்படும் இன்னல்கள், துன்பங்கள், அச்சங்கள், அவலங்கள் என்பவற்றிலிருந்து விடுபடுவதற்கு இறைவழிபாடு உதவகின்றது. சமய குரவர் இறைவன்மீது அன்புசெலுத்தும் வழிகளைக் காட்டிச் சென்றனர். கோயில் பற்றியும் இறைவனின் அருட்குணங்கள் பற்றியும் பாடப்பெற்ற கருத்துச்செறிவுமிக்க பாடல்கள் எம்மை இறையன்பு நிலைமை பற்றி அறியச் செய்பவை. அத்தகைய இறைவழிபாடுகளின் தேவை பற்றிய கருத்தியலை இந்நூலிலுள்ள 13 கட்டுரைகளும் வலியுறுத்துகின்றன. நல்ல மனம் உண்டாம், தாயு நீயே தந்தை நீயே, நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன், அனைத்திலும் மேவியிருப்பவளே, உலையிலே ஊதி உலகக் கனல் வளர்ப்பாள், வணங்கும் பேய் வடிவம், உலகளந்த நாயகிதாள் உரைப்பாய் நெஞ்சே, அன்னையவள் வையமெல்லாம் ஆதரிப்பாள், தேச முத்துமாரி,  தமிழர் வழிபாட்டில் இளமையின் செல்நெறி, காலத்தை உணர்த்தும் கன்னியர் நோன்பு, சிவபுராணம் காட்டும் சிறப்பு வழிபாடு, திருக்கார்த்திகை விளக்கீடு ஆகிய 13 தலைப்புகளில் இக்கட்டுரைகள் அமைகின்றன.

ஏனைய பதிவுகள்

10609 பிறத்தியாள்: பானுபாரதி கவிதைகள்.

பானுபாரதி. சென்னை 600005: கருப்புப் பிரதிகள், பி.55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (சென்னை-5: ஜோதி என்டர்பிரைசஸ்). 80 பக்கம், விலை: இந்திய ரூபா 50., அளவு: