8193 நகுலநாதம்: யாழ்ப்பாணம் கீரிமலை ஸ்ரீ நகுலாம்பிகா

சமேத நகுலேஸ்வர சுவாமி தேவஸ்தானம் மகா கும்பாபிஷேக சிறப்பு மலர். கு.நகுலேஸ்வரக் குருக்கள் (கௌரவ ஆசிரியர்), தி.ஞானசேகர ஐயர், திருமதி ஞானலட்சுமி ஞானசேகர ஐயர் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: ஸ்ரீ நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வர சுவாமி தேவஸ்தானம், கீரிமலை, 1வது பதிப்பு, மார்ச் 2012. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48B, புளுமெண்டால் வீதி).

xii, 602 பக்கம், வண்ணத் தகடுகள், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×18 சமீ., ISBN: 978-955-8354-44-5.

24.3.2012 அன்று வெளியிடப்பெற்ற கீரிமலை நகுலேஸ்வரம் ஆலய கும்பாபிஷேக மலர். பாயிரவியல், வாழ்த்தியல், வரலாற்றியல், கிரியாவியல், மெய்யியல், இசையியல், மீட்பியல், பதிவியல் (எழுத்துருஃஒளியுரு) ஆகிய எட்டுப் பிரிவுகளின் கீழ் பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளை உள்ளடக்கிய பாரிய மலர் இதுவாகும்.

ஏனைய பதிவுகள்