8194 நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் புதிய கட்டடத் திறப்பு விழா சிறப்பு மலர்.

நடராசா சச்சிதானந்தன் (தொகுப்பாசிரியர்). லண்டன்: நல்லை ஆதீன திருப்பணி நிதிக்குழு, 1வது பதிப்பு, ஜுன் 2013. (யாழ்ப்பாணம்: சிவராம் பிரின்டர்ஸ், 20 (32) கல்லூரி வீதி, யாழ்ப்பாணம்).

102 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ.

இலங்கையிலுள்ள பிரசித்திபெற்ற ஆதீனங்களுள் நல்லை ஆதீனம் குறிப்பிடத்தக்கது. தவத்திரு சோமசுந்தர பரமாசாரிய சுவாமிகள் தலைமையில் செயற்படும் நல்லை ஆதீனம் லண்டன்  நலலை ஆதீன திருப்பணி நிதிக் குழுவின் உதவியுடன் முழுமையான வசதிகளுடன் மீளமைக்கப்பட்டபோது வெளியிடப்பட்ட சிறப்பு மலர். ஆசிச் செய்தி, வாழ்த்துச் செய்திகளுடன் திருமடங்களும் ஆதீனங்களும் சைவ சமய காப்பகம் (சிவசக்தி ஸ்ரீ ராம் தேவலோகேஸ்வரக் குருக்கள்), திருமந்திரம் காட்டும் வாழ்வியல் நெறிகள் (முனைவர் இரா சந்திரசேகரன்), ஈழத்தில் ஆதீனம் அமைத்த ஸ்ரீமத் சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள் (ஆறு திருமுருகன்), சுவாமிகள் வளர்ந்த வரலாறு- சுயசரிதம் (நல்லை ஆதீன முதல்வர்), நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் (மு.சிவலிங்கம்) ஆகிய சிறப்புக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்