க.சிவானந்தமூர்த்தி, த.சண்முகநாதன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: புத்தூர் அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி உடனமர் ஸ்ரீ விஸ்வநாதசுவாமி தேவஸ்தானம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1989. (யாழ்ப்பாணம்: சாந்தி அச்சகம்).
(12), 82 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19.5 சமீ.
புத்தூர் அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி உடனமர் ஸ்ரீ விஸ்வநாதசுவாமி தேவஸ்தான கும்பாபிஷேகம் இடம்பெற்றதை முன்னிட்டு வெளியிடப்பட்ட இச்சிறப்பு மலரில் தேவஸ்தான வரலாறு (த.சண்முகநாதன்), மகா கும்பாபிஷேகம் (கா.கனகசிங்கம், த.விஸ்வலிங்கம்), அமரர் மழவராயர் கந்தையாவினது பணிகள் (க.சிவானந்தமூர்த்தி), தீதின்றி வந்த பொருள் (மு.கணேசன்), புத்தூரில் சைவப்பணி (சதா. லோகேஸ்வரன்), புத்தூர் சிவனே புதுமைபுரி ஐயனே (பாடல்), அகச்சமய முரண்பாடுகளும் சித்தாந்த முடிவுகளும் (சோ.கிருஷ்ணராஜா), உண்மைச் சமயமும் இன்றைய சமூகமும் (நா.ஞானக்குமாரன்), ஐரோப்பியர் ஆட்சிக்கு முற்பட்டகால யாழ்ப்பாணத்து இந்துப் பாரம்பரியம் ஒரு வரலாற்று நோக்கு (பரமு புஷ்பரத்தினம்), கார்நிகர் கொடையினன் வள்ளல் உயர்திரு மழவராயர் கந்தையா (ஐ.ஜெகநாதன்), திருவூஞ்சல் (பிரம்மஸ்ரீ மா.த.ந.வீரமணி ஐயர்) ஆகிய படைப்புக்கள் இம்மலரை அலங்கரிக்கின்றன.