ப.சிவானந்த சர்மா (தொகுப்பாசிரியர்). நீர்வேலி: மூத்த விநாயகர் தேவஸ்தானம், வாய்க்காற்றரவை, 1வது பதிப்பு, ஜுலை 2008. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செட் பிரின்ரேர்ஸ், பலாலி வீதி).
60 பக்கம், வண்ணத்தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ.
வாய்க்காற்றரவை மூத்த விநாயகர் தேவஸ்தானத்தின் நவகுண்டபக்ஷ மஹாயாக சகித புனராவர்த்தனப் பிரதிஷ்டா மஹாகும்பாபிஷேகம் 26.5.2008 அன்று நடந்தேறியதின் நினைவாக இம்மலர் வெளியிடப்படுகின்றது. அருளாளர்களின் ஆசியுரைகளுடன், பிரம்மஸ்ரீ சு.பிட்சாடனக் குருக்கள் 1962இல் எழுதிய கோவில் வரலாறு, வாய்க்காற்றரவை மூத்த விநாயகர் மீது புலவர் த.குமாரசாமிப்பிள்ளை பாடியருளிய ஊஞ்சற் பதிகம், குடமுழுக்கு விழா பற்றிய பிரம்மஸ்ரீ ஆ.இராமநாத சர்மாவின் கட்டுரை, பஞ்சகுண்ட, நவகுண்ட பூஜைகளும் பிரபஞ்ச தத்துவமும் என்ற தலைப்பில் ப.சிவானந்த சர்மா எழுதிய கட்டுரையும், கணபதி யெனும் குணமேரு (வசந்தா வைத்தியநாதன்), யாழ்ப்பாணக் குடாநாட்டில் விநாயகர் வழிபாட்டு மரபின் தோற்றமும் தொன்மமும்- சிலகுறிப்புகள் (செல்லையா கிருஷ்ணராஜா), நீர்வேலி வாய்க்காற்றரவை மூத்த விநாயகர் தேவஸ்தானம்: வரலாற்றுக் குறிப்புகளும் வளர்ச்சிப்படிகளும் (ஆ.சந்திரசேகரக் குருக்கள்) ஆகிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.