மீரா வில்லவராயர்;;. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xiv, 695 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: ரூபா 950., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-363-1.
இந்நூல் தமிழிசை வரலாறு, இசையியல், ஹிந்துஸ்தானி-மேற்கத்திய செந்நெறி இசை மரபுகள் ஆகிய மூன்று பெரும் இயல்களைக் கொண்டதாகவும், கர்நாடக இசை பற்றிய ஆழ்ந்த அகன்ற பரிமாணங்கள் அனைத்தையும் உள்ளடக்கி பூரணத்துவம் கொண்டதாயும் ஆக்கப்பெற்றுள்ளது. முதற் பகுதியில் இசை பயிலும் மாணவர்கள் மற்றும் இசை ஆர்வலர்கள் தமிழிசையின் வரலாற்றினை அறியும்பொருட்டு விரிவான முறையில் தமிழிசையின் வரலாறு தரப்பட்டுள்ளது. கர்நாடக இசை (கர்நாடக சங்கீதம்) 12ம் நூற்றாண்டில் வழக்கில் வந்துள்ளது. இந்தியாவில் தக்கணத்தில் ஒரு பகுதியை (மகரட்டினம்)ஆண்ட சோமேசுவர பூல்லோகமல்லன் என்னும் குறுநில மன்னன் ஆண்ட வேளையில் தென் இந்திய இசையில் ஈடுபட்டு, அதற்கு கர்நாடக சங்கீதம் எனப் பெயர் வைத்தான் என்று அறியமுடிகின்றது. இந்நூலின் இரண்டாம் பகுதியில் கர்நாடக சங்கீதம் பற்றி அறிய விரும்பும் அனைவரும் பயனுறும் வகையில் இராகங்களின் இலட்சணங்கள், வாத்தியக் கருவிகள் பற்றிய விபரம், வாக்கேயகாரர்கள் விவரம், இராகங்கள், தாளங்கள் பற்றிய விளக்கங்கள் போன்ற தகவல்கள் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. தற்கால இசை பயிலும் மாணவர்கள் தாம் கற்கும் இசை முறைமைகளுடன் ஏனைய இசை முறைமைகளையும் ஒப்புநோக்கிக் கற்பது அவசியமாகின்றது. அவ்வகையில் இந்நூலின் மூன்றாம் பகுதியில் ஹிந்துஸ்தானி இசை, மேற்கத்திய இசை பற்றிய அடிப்படைத் தத்துவங்கள் கொடுக்கப்பட்டுள்ளதுடன் கர்நாடக இசையுடன் அவை ஒப்பிட்டும் நோக்கப்பட்டுள்ளன.