ச.அருளானந்தம் (புனைபெயர்: கேணிப்பித்தன்). திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37/7 மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2012. (கொழும்பு 12: நிசான் பிரின்டர்ஸ், 64 என், பீர் சாகிபு வீதி).
vi, 32 பக்கம், சித்திரம், விலை: ரூபா 150., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-53372-2-9.
கேணிப்பித்தன் அருளானந்தனின் சிறுவர் பாடல் தொகுப்புகளின் வரிசையில் புது வரவாக அமையும் மற்றுமொரு நூல் இது. 30 சிறுவர் பாடல்களைக் கொண்ட இந்நூலின் பாடல்கள் எங்கள் அம்மா, எங்கள் அப்பா, எங்கள் பாட்டி, காகம், கரிக்குருவி, நாய்க்குட்டி, செல்லப் பிராணி, வீட்டு மணியொலி, தண்ணீர், மலர்கள், பந்தாட்டம், விடியற்காலை, மாலை நேரம், உலகம், கல்வி, புவிக்கோளம், மாம்பழம், பூனை, கூண்டுக்கிளி, வெள்ளைக் கொக்கு, ஆலா, இசையும் அசைவும், பட்டம், நூல்கள், ஆசிரியர்கள், விளையாடுவோம், தாய்-தந்தை, கடலும் செயலும், பழக்கலவை, சந்திரன் உதயம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன.