ஞானமனோகரி ஸ்ரீஸ்கந்தராஜா. சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2008. (சென்னை 600094: B.V.R. ஆப்செட்).
xxvi, 94 பக்கம், விலை: இந்திய ரூபா 40., அளவு: 17.5×12 சமீ.
திருக்கோணமலை மெதடிஸ்த பெண்கள் கல்லூரியின் பழைய மாணவியான நூலாசிரியை ஏற்கெனவே ஆத்ம துளிகள் என்ற ஆன்மீகப் பாடல் நூலை எழுதியவர். நல்ல மாணவியாக, மனைவியாக, தாயாக, பாட்டியாக அவர் பெற்றுள்ள அனுபவங்களை சிறுவர் இலக்கியமான இவரது சிறுவர் பாடல்களில் தரிசிக்கலாம். உட்பொதிவு என்ற பிரிவில் 14 பாடல்களும், 1977இல் பாடப்பெற்ற பாடல் என்ற 2வது பிரிவில் 6 பாடல்களும், கணிதப்பாடல்கள் என்ற பிரிவில் 7 பாடல்களும், அம்மாமாருக்கு உரிய பாடல் என்ற பிரிவில் 6 தாய் பற்றிய பாடல்களும், என் அம்மா பாடிய பாட்டுக்கள் என்ற தலைப்பில் 1916-17ம் ஆண்டுகளுக்குரிய மூன்று பாடல்களுமாக மொத்தம் 36 பாடல்களைத் தேடித் தொகுத்து வழங்கியுள்ளார்.