ஓ.கே.குணநாதன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், 64 கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, ஸ்டேஷன் வீதி).
92 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 18×12.5 சமீ., ISBN: 978-955-8715-41-3.
வீரகேசரி வார வெளியீட்டில் தொடராக வெளிவந்த கதை. சிறுவர் இலக்கியத்திற்கான தேசிய சாகித்திய மண்டலப் பரிசினை 2008இல் பெற்றுக்கொண்டது. சிறுவர்களின் உளப்பாங்கை அறிந்து அவர்களுக்கேற்றவிதத்தில் கதையைச் சொல்கின்றார். உயிரைக் காப்பதே மரம் என்று வலியுறுத்தும் இக்கதையில் மரங்களையும் காடுகளையும் பேணவேண்டியதின் முக்கியத்தை சுவாரஸ்யமாக கதையாகச் சொல்கிறார். இது குணநாதனின் ஏழாவது சிறுவர் நாவல். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 206332).