கந்தையா ஸ்ரீகணேசன். வவுனியா: வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், 1வது பதிப்பு, 2010. (வவுனியா: மல்டிவிஷன் அச்சுக் கலையகம், இல. 77, முதலாம் குறுக்குத் தெரு).
xviii, 219 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-97524-7-9.
யாழ்ப்பாணத் தமிழ் நாடக அரங்கு, நிதர்சனத்தின் புத்திரர்கள், நாற்றுமேடை ஆகிய மூன்று நூல்களைத் தொடர்ந்து வெளிவரும் கந்தையா ஸ்ரீகணேசனின் நான்காவது நூல். வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தினரின் 21ஆவது நூலாகவும் இது அமைகின்றது. கடந்த 20 ஆண்டுகளாக (1989-2009) கவிதை, நாடகம், நூல் ஆய்வு, ஆங்கில இலக்கியம் ஆகிய நான்கு வெவ்வேறு துறைகளிலும் ஆசிரியர் எழுதிய விமர்சனக் கட்டுரைகளை இந்நூல் உள்ளடக்கியுள்ளது.