க.அருணாசலம். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xii, 170 பக்கம், விலை: ரூபா 650., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-295-5.
ஈழத்தில் ஏறத்தாழ 1965 வரை எழுதப்பட்ட தமிழ்ச் சிறுகதைகள் பற்றிய ஒரு ஆய்வு இதுவாகும். ஈழத்துச் சிறுகதைகளை அவற்றின் வரலாற்று ரீதியான வளர்ச்சிப்போக்கின் அடிப்படையில் தொடக்ககாலம், மறுமலர்ச்சிக் காலம், 1952ஆம் ஆண்டிற்குப் பிற்பட்ட காலம் என மூன்று காலப் பிரிவுகளாக வகுத்து, அவ்வக்காலகட்டத்தில் எழுந்த கதைகளைப் பொருட் பண்பின் அடிப்படையிற் பகுத்து மதிப்பீடுசெய்யும் ஒரு முயற்சியாக இது அமைகின்றது. அவ்வகையில் 1965ம் ஆண்டு வரையுள்ள காலப்பகுதியினை அவ்வக்காலப்பகுதிக் கதைகளின் பண்புகளை நிர்ணயித்த அரசியல், பொருளாதாரம், சமூகம், பண்பாட்டுச் சூழல்களையும் தமிழ்நாட்டு எழுத்துக்களின் தாக்கத்தையும் அவற்றின் காரண காரியத் தொடர்புகளையும் இந்நூல் ஆராய்கின்றது. தனது இளமாணி, முதுமாணி, கலாநிதிப் பட்டங்களை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பெற்ற க.அருணாசலம் அதே பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.