மனோன்மணி சண்முகதாஸ், செல்வஅம்பிகை நடராஜா (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: கோகுலம் வெளியீடு, 1வது பதிப்பு, ஜனவரி, 2009. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டர்ஸ், இல. 424 காங்கேசன்துறை வீதி).
vi, 196 பக்கம், வண்ணத்தகடு, விலை: ரூபா 420., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-98925-1-9.
இந்நூலில் இளங்கோவடிகளால் இயற்றப்பெற்ற சிலப்பதிகாரம் என்ற காப்பியத்தின் நுட்பமான பல செய்தித் தொகுப்புக்களை எளிமையாக்கி பத்து இலக்கியக் கட்டுரைகளாக வழங்கியிருக்கின்றார்கள். இளங்கோவின் பார்வையில் பெண்கள் சமூகம், இளங்கோவின் பார்வையில் கற்பு, கண்ணகியும் மாதவியும், கானல்வரியில் காதலும் காமமும், சிலப்பதிகாரத்தில் மாலை, காவிய நாயகியின் வழக்கு, மாதவி கற்பு மாசுடைத்து, சிலப்பதிகாரம் நாட்டார் வழக்கில், சிலப்பதிகாரத்தில் இரு குரவை, சிலம்பில் மூன்று வரிகள் ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இக்கட்டுரைகளை பேராசிரியர் அ.சண்முகதாஸ், திருமதி மனோன்மணி சண்முகதாஸ், எஸ்.சிவலிங்கராஜா, செல்வஅம்பிகை நடராஜா ஆகியோர் எழுதியுள்ளனர். அவ்வப்போது ஆய்வரங்குகளில் சமர்ப்பிக்கப்பட்டவை. இது கோகுலம் வெளியீட்டுத் தொடரில் இரண்டாவது நூல்.