தக்கலை எம்.எஸ்.பஷீர். சென்னை 26: குமரன் பதிப்பகம், 3(12) மெய்கை விநாயகர் தெரு, வடபழனி, 1வது பதிப்பு, 2005. (சென்னை 94: சிவா கிராப்பிக்ஸ்).
200 பக்கம், விலை: இந்திய ரூபா 60., அளவு: 18×12 சமீ.
சீறாப்புராணம் இஸ்லாமியத் தமிழ்க் காப்பியங்களில் பகழ்பெற்றதும், முதன்மையானதும், மூத்ததுமாகும். சீறா என்பது பெருமானார் முகம்மது (சல்) அவர்களின் வாழ்க்கையையே சிறப்பாகக் குறிப்பதாகும். புராணம் என்பது பழமையான, புனிதமான வாழ்க்கை வரலாறு எனலாம். சீறாப்புராணம் நபிகள் நாயகத்தின் புனிதமான வரலாற்றினைப் புகழ்ந்து பாடும் காப்பிய இலக்கணங்களைப் பெற்ற வரலாற்றுக் காப்பியம் எனலாம். மூன்று காண்டங்கள், 24 படலங்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களில் சிறப்பானவற்றைத் தேர்ந்து ஆய்வுக் கட்டுரகளாக இந்நூலில் வழங்கியுள்ளார். சீறாவில் தலைமுறைப் படலச்சிறப்பு, சீறாவில் ஸ்ரீமானிட நிகழ்ச்சிகள், சீறாவில் கனவுகள், சீறாவில் போர்ப் படலங்கள், சீறாவில் ஜிப்ரயீல் (அலை), சீறாவில் சீர்பெறு அணிகள் சில, சீறாவில் முழக்கங்கள், இலக்கிய வருணனைகள், மழைப்பாட்டும் சீறாவில் மழை அழைப்பித்த படலமும், சீறாப்புராணத்தில் அவல வீரர்கள், இஸ்லாமிய தமிழ் இலக்கியங்களில் தனிமனித சமூகப் பண்பாட்டு ஆன்மீக விழுமியங்கள், சீறாப்புராணத்தில் கானல் நீர், சின்ன சீறா- ஓர் ஆய்வு, சின்ன சீறாவில் கைபர் ஆகிய 14 கட்டுரைகளை இந்நூல் உள்ளடக்குகின்றது.