கே.எஸ்.சிவகுமாரன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2011. (சென்னை 600094: B.V.R. ஆப்செட்).
vi, 182 பக்கம், விலை: இந்திய ரூபா 70., அளவு: 18×12 சமீ.
நூலாசிரியரின் 75ஆவது வயது சிறப்பு வெளியீடாக வந்துள்ள இந்நூலில் ஆசிரியரின் 35 இலக்கியக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கே.எஸ்.சிவகுமாரன் இலங்கையின் முன்னணித் திறனாய்வாளர்களுள் ஒருவர். இலங்கையில் Daily News, The Island, வீரகேசரி, நவமணி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரிய பீடங்களில் பணியாற்றியவர். இலங்கை வானொலியின் செய்தியாசிரியராகவும் , கொழும்பு, மாலைதீவு, ஓமன், அமெரிக்கா ஆகிய இடங்களில் ஆங்கில இலக்கிய விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். தற்போது Colombo South International College என்ற தனியார் கல்வி நிறுவனத்தில் பணியாற்றுகின்றார்.