எஸ்.தில்லைநாதன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
x, 174 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-325-9.
இடைக்காலத்தில் பெரும் பேரரசாகத் திகழ்ந்த சோழர் ஆட்சியில்தான் முதன்முதலாகத் தமிழகம் முழுவதும் ஒரே ஆட்சியின்கீழ் வந்தது. அக்காலம் தமிழ் நாகரீகம், பண்பாட்டு வளர்ச்சியின் முக்கிய கட்டமாகத் திகழ்ந்து பல்வேறு கலை, இலக்கிய வளர்ச்சிக்கும் தூண்டுகோலாக அமைந்தது. பெரியபுராணமும், கம்ப இராமாயணமும் இங்குதான் இயற்றப்பட்டன. சோழர்கால அரசவை இலக்கியங்களை ஆராயும் இந்நூலில் பரணி, உலா ஆகிய இலக்கிய வகைகளோடு தொடர்புள்ள கல்வெட்டு மெய்க்கீர்த்திகளை ஆசிரியர் ஆராய்கின்றார். இந்நூல் அறிமுகம், வரலாற்றுப் பின்னணி, சோழர்கால அரசவைப் புலவர்கள், மெய்க்கீர்த்திகளும் இலக்கியப் பொறிப்புகளும், பரணி, உலா, பிள்ளைத்தமிழ், கோவையும் பிற அரசவைப் பாடல்களும், முடிவுரை ஆகிய ஒன்பது இயல்களில் எழுதப்பட்டுள்ளது. பேராசிரியர் எஸ்.தில்லைநாதன், இலங்கையின் ஓய்வுநிலையில் மூத்த தமிழ்ப் பேராசிரியராக விளங்குபவர். பேராதனைப் பல்கலைக்கழைகத்தில் நீண்டகாலம் விரிவுரையாளராக, பேராசிரியராக, துறைத்தலைவராகப் பணியாற்றியவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் மு.வரதராசனின் மேற்பார்வையில் சோழர்கால அரசவை இலக்கியம் பற்றி ஆய்வுசெய்து ஆ டுவைவ பட்டம் பெற்றவர்.