8727 தமிழ் இலக்கிய இலக்கணப் பேழை.

இ.க.சிவஞானசுந்தரம். கொழும்பு 6: தென்றல் பப்ளிக்கேஷன்ஸ், 135, கனல்பாங்க் வீதி, 1வது பதிப்பு, ஐப்பசி 2004. (சென்னை 600001: மாணவர் மறுதோன்றி அச்சகம்).

viii, 316 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 21.5×14 சமீ., ISBN: 955-8621-00-5.

தமிழக இலக்கிய வரலாறு தொடர்பான கட்டுரைகள், ஈழத்து இலக்கியம் தொடர்பான கட்டுரைகள், நவீன இலக்கியம் தொடர்பான கட்டுரைகள், யாப்பிலக்கணம், மொழியியல், மொழி வரலாறு தொடர்பான கட்டுரைகள் என நான்கு இயல்களில் மொத்தம் 28 இலக்கியக் கட்டுரைகளை இந்நூல் உள்ளடக்குகின்றது. நயினாதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட கதிரேசு சிவஞானசுந்தரம் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவையும், இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுமாணிப்பட்டத்தையும் பெற்றவர்.

ஏனைய பதிவுகள்

16580 யாருக்கோ பெய்யும் மழை (கவிதைகள்).

தாட்சாயணி (திருமதி பிரேமினி பொன்னம்பலம்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, டிசம்பர் 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). xii, 160