8728 தமிழ் நாவல்கள்: ஒரு மீள்பார்வை.

மனோன்மணி சண்முகதாஸ், மா.இரகுநாதன், சி.சிவநிர்த்தானந்தா (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 1வது பதிப்பு, ஐப்பசி 2008. (கொழும்பு 12: ஸ்ரீ லங்கா புத்தகசாலை, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

vi, 149 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-1472-89-4.

உயர்தர மாணவர்களுக்கான உசாத்துணை நூலாகப் பயன்படுத்தப்படும் நோக்கில் எழுதித் தொகுக்கப்பட்ட நூல் இது. தமிழ் நாவல்கள் சில நோக்குகள் (செங்கை ஆழியான்), பிரதாப முதலியார் சரித்திரம்: ஒரு மீள்பார்வை (மனோன்மணி சண்முகதாஸ்), கமலாம்பாள் சரித்திரம்: ஒரு நோக்கு (செல்வஅம்பிகை நடராஜா), பத்மாவதி சரித்திரம்: ஒரு மதிப்பீடு (ஈஸ்வரநாதபிள்ளை குமரன்), ஈழத்துத் தமிழ் நாவல் வரலாறு (ம.இரகுநாதன்), அஸன்பே சரித்திரம் (அ.சண்முகதாஸ்), மங்களநாயகம் எழுதிய நொறுங்குண்ட இருதயம் (எஸ்.ஜெபநேசன்), கோபால நேசரத்தினம்: ஒரு மீள்பார்வை (சி.சிவநிர்த்தானந்தா), கே.டானியலின் கானல்: ஓர் உளவியல் மீள்பார்வை (த.கலாமணி), நாவல் ஒரு மதிப்பீடு (துரை.மனோகரன்) ஆகிய பத்து ஆய்வுக்கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

17993 ஈழத்தமிழரின் புலம்பெயர் இலக்கியம்.

இரா.செங்கொடி. சென்னை 600 018: பாரதி புத்தகாலயம், இல.7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, 1வது பதிப்பு, டிசம்பர் 2023. (சென்னை 600 005: பிரின்டெக்). 206 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.,